சென்னையில் உள்ள அம்பேத்கர் நகர் என்ற இடத்தின் வாழ்வியல், மக்கள் சந்திக்கும் இடப்பற்றாக்குறை அதற்கு பின்பிருக்கும் அரசியல் ஆகியவற்றை தனது புகைப்படங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார் யாழினி. சென்னையைச் சேர்ந்த இவர் கவின் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை நுண்கலை பட்டப் படிப்பு படிக்கிறார். வேளச்சேரியில் வசித்துவருகிறார் இவர். ‘‘நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ளது அம்பேத்கார் நகர். இவ்விடத்தைப்பற்றிய தவறான பொதுக்கருத்துகள் பலவற்றை கேட்டிருக்கிறேன்.
போகிறபோக்கில் கூறப்படும் கருத்துகள் என்று என்னால் விட்டுவிட முடிவில்லை. நீண்ட விவாதம் செய்வதைவிட புகைப்படங்கள் மூலம் பதிலடிகொடுக்க நினைத்தேன். ஆறு மாத காலம் படங்கள் எடுத்தேன். சிறுவயது முதல் வீட்டில் அரசியல், சமூகப்பிரச்சனைகள் பற்றிய விவாதங்கள் நடைபெறும். அதுதான் இதற்கான தூண்டுதல்‘ என்கிறார். யாழினியின் அப்பா ஆறுமுகவேல் அட்டக்கத்தி, காலா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அம்மா நர்மதா, செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
ஜனவரி, 2020.